முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இருந்து நீக்குமாறும், இல்லாவிடின் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்

என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம், அந்த கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நேற்று வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பக்கபலமாக இருக்கும் பெரும்பாலான உயர் இராணுவ அதிகாரிகள் தயா ரத்நாயக்காவை அழைத்து, நியமனம் வழங்கப்பட்டதற்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

ரத்நாயக்கவை நீக்காவிடின் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என வினவியபோது, தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்றும், நியமனத்திற்கு எதிராக செயற்பட உள்ளதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக வருபவர்களுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் உள்ள மற்றவர்களும் விரக்தியடைந்துள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வரவேற்க வேண்டிய நபர் அல்ல என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரகூட ஏற்றுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ், 2010ஆம் ஆண்டில் தான் சிறையில் அடைக்கப்பட்டதில், ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

“ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட கட்சியில் உள்ள வேறு சிலரும் கட்சிக்கு ஆட்களை ஏற்றுக்கொள்வதற்கான கட்சித் தலைவரின் தீர்மானத்தால் தாங்களும் கலக்கமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்திருந்தனர்.

“கட்சித் தலைவருக்கு விருப்பமான எவரையும் கட்சிக்கு வரவேற்கும் வகையில் வெற்று காசோலை வழங்க வேண்டும் என்ற கட்சியின் செயற்குழு முடிவில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி