கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற

தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத் எரங்க தனது வட்ஸ்அப் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார்.

“நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என கூறுங்கள்.நான் அதைப் படிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தார்.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி பிரபாத் எரங்க, பொலிஸாரின் விசாரணைகளின் போது விபத்து தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விரைவில் கொழும்பை அடைய முயற்சிப்பதாகவும், அப்போது சனத் நிஷாந்த காரில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

விபத்தின் போது, ​​வாகனம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் 29ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தங்கொட்டுவையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி