ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் நீதி கோரி 'கறுப்பு ஐனவரி' நினைவேந்தலும் கலந்துரையாடலும்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பங்கெடுப்பில் இந்த நினைவேந்தல் மற்றும் கலந்துரையாடல் நேற்று மதியம் 2 மணியளவில் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது ஊடக சுதந்திரம், நிகழ்நிலைக் காப்புச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் ஊடகங்களில் செலுத்தவுள்ள தாக்கம் தொடர்பாகவும் சட்டத்தரணி. ஊடகவியலாளர், துறைசார் நிபுணர்களின் உரையும் இடம்பெற்றது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனவரி மாதம், இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது. பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள்காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை 'கறுப்பு ஜனவரி'யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி