ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக எதிர்வரும் நாள்களில் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. கலந்துரையாடல்களின் போது தேசிய அரசை அமைப்பதற்கான கூட்டணி உருவாக்கப்படவுள்ளது எனவும், ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான திட்டம் வெளியிடப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

வடக்கில் தமிழ்க் கட்சிகள், மலையக அரசியல் கட்சிகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் கூட்டணியை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணி உருவானதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பிரதமர் பதவியைக் கூட்டணியின் பலமான தலைவர் ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி