செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை

துறைமுகங்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சர்கள் பலரை சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்காக இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

செங்கடலின் பாதுகாப்புக்காக கப்பல்களை அனுப்பும் செலவு வாபஸ் பெறப்பட்டால் கப்பல்கள் வராமல், நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் போர்க்கப்பல்கள் செங்கடலுக்கு அனுப்பப்படுவது சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே அன்றி மாநிலங்களுக்கிடையிலான போர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் தமது நாடுகளுக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹவுத்தி போராளிகளினால் பல கப்பல்கள் செங்கடலைக் கடந்து வேறு பாதைகளைப் பயன்படுத்துவதால் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு கப்பலுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால் கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எரிபொருள் கப்பலுக்காக காத்திருந்த இலங்கை தற்போது சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க கப்பல்களை அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடலுக்கு அனுப்புவதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி