2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. ஜனவரி 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“2298 பரீட்சை நிலையங்களில் 346976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, 319 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில, திம்புலாகல ஆகிய கல்விப் பிரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்பான வேறு இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை சீட்டுகள் செல்லுபடியாகும்.

“பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்கு இறுதித் தருணம் வரை காத்திருக்க வேண்டாம். குறைந்தது அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

“பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது பரீட்சை திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 1911 இலக்கத்திற்கு அழைக்கலாம்.

“பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதோடு, அந்த நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப செயற்படும்.” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி