இலங்கையில் 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான

TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு, 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒருவர் வருமானமாக 12 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களும் வருமான வரியில் பதிவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக  மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட "2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்" என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக  பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்கள் குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த முறையில் வரி தளத்தை விரிவுபடுத்துவது தனிநபர் வரிச்சுமையை குறைக்க மட்டுமே உதவும்.

 2023 ஆம் ஆண்டை விட நேர்மறையான குறிப்பில் இலங்கை 2024 இல் அடியெடுத்து வைத்துள்ளது என்றும், இந்த ஆண்டு நனவாகும் சிறந்த வாய்ப்புகள் நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

இதேபோன்ற பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேறு பல நாடுகளையும் விட இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மிக விரைவாக மீட்டெடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி