Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

உகண்டாவிற்கு ஏற்றுமதி செய்த 102 தொன் எடை கொண்ட பொருட்களின் மர்மம்!

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2021 • 5:42 PM

உகண்டாவிற்கு ஏற்றுமதி செய்த 102 தொன் எடை கொண்ட பொருட்களின் மர்மம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உகண்டாவின் ‘என்டபே” விமான நிலையத்திற்கு 2021 பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட ‘எயார் பஸ் யு 333″ விமானங்கள் மூன்றில் இந்த இந்த முத்திரையிடப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையானது.
  • தொன் எடை கொண்ட பொதிகளின் உரிமையாளர் யார் என்ற தகவலோ, அவை யாருக்கு அனுப்பப்பட்டது என்ற தகவலையோ, முத்திரையிடப்பட்டிருந்த பொருட்கள் எவை என்பது பற்றிய தகவலையோ வெளியிட மறுக்கப்பட்டுள்ளது.
  • இந்நாட்டு விமானங்கள் மூலம் பொருட்கள் அனுப்பும் வரலாற்றில் விசேட சந்தர்ப்பமாகுமென சிறி லங்கன் விமானக் கம்பனியான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

உகண்டாவின் ‘என்டபே” விமான நிலையத்திற்கு 2021 பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட ‘எயார் பஸ் யு 333″ விமானங்கள் மூன்றில் இந்த இந்த முத்திரையிடப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டமையானது. இந்நாட்டு விமானங்கள் மூலம் பொருட்கள் அனுப்பும் வரலாற்றில் விசேட சந்தர்ப்பமாகுமென சிறி லங்கன் விமானக் கம்பனியான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருந்தாலும், இந்த விமானப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக, தகவலறியும் உரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 102 தொன் எடை கொண்ட பொதிகளின் உரிமையாளர் யார் என்ற தகவலோ, அவை யாருக்கு அனுப்பப்பட்டது என்ற தகவலையோ, முத்திரையிடப்பட்டிருந்த பொருட்கள் எவை என்பது பற்றிய தகவலையோ வெளியிட மறுக்கப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமையின் கீழ் மேற்படி தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘சன்டே டைம்ஸ்” ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வின்னப்பத்திற்கு பதிலளித்து சிறிலங்கன் விமானக் கம்பனி, விமானங்களில் அனுப்பப்படும் பொருட்களின் உள்ளடக்கம் சம்பந்தமாக சரியான தகவல்கள் இல்லையெனக் கூறுகிறது. என்றாலும், மேற்படி பொருட்கள் சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனவா என்பது இது வரை தெரியவில்லை.

பெப்ரவரி 24ம் திகதி சிறிலங்கன் விமானச் சேவையின் உத்தியோக ட்விட்டர் கணக்கிலிருந்து தகவலொன்றை வெளியிட்டு, ‘உகண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு மூன்று சரக்கு விமானங்கள் தொடர்ந்து பயணிப்பதுடன், சிறிலங்கன் காகோ இன்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்த போதிலும் பின்னர் அந்தக் குறிப்பும் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் சம்பந்தமாக யாரையாவது சந்தேகிப்பதாயின், வெளியிடப்பட்ட செய்தியையும் புகைப்படத்தையும் நீக்கியிருப்பது கேள்விக்குரியதாகும் எனவும் பத்திரிகை குறிப்பிடுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...