Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எமது அணி 10 எம்பிக்களுடன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்! -மனோ கணேசன்

T

The Leader Desk

நவம்பர் 7, 2024 • 6:31 AM

எமது அணி 10 எம்பிக்களுடன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்! -மனோ கணேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
  • ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
  • இந்த பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும்.
எழுத்து அளவு:

 பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இந்த பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும். எம்மை நாமே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. இந்த வரலாற்று சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். வரலாறு தந்திருக்கும் வாய்ப்பை நாம் தவற விடகூடாது.

ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனை போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை பார்த்து இருக்கிறேன். இப்போதும் பார்க்கிறேன். இந்த பசப்பு வார்த்தைகளில் நமது மக்கள் ஏமாந்து விட கூடாது.  உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம். ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.

ஆகவே ஏழு மாவட்டங்களில் போட்டி இடும் எமது பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் நாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும். இதை மனதில் கொண்டு நமது மக்கள் வாக்களிக்க  வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். 

தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் கூறி உள்ளதாவது;   

இந்நாடு இன்று ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. இடை அடுத்து நாடு எழுச்சியும் பெறலாம். வீழ்ச்சியும் அடையலாம். இவற்றை பெரும்பாலும் பெரும்பான்மை மக்கள் தெரிவு செய்யும் பெரும்பான்மை கட்சிகளே தீர்மானிக்க போகின்றன.

இந்த சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எம் தேவைகள் பற்றி, எம் இருப்பு பற்றி, எம் அபிலாசைகள் பற்றி, நாம்தான் பேச வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். இன்று தேனொழுக பேசும் வேறு எவரும் எம்மை பற்றி பேச மாட்டார்கள். உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று  தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம்.

ஆகவே, பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டி இடும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பத்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் முகமாக வாக்களிக்கும் படி மக்களை வேண்டுகிறேன்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எமது அணி 10 எம்பிக்களுடன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்! -மனோ கணேசன் | Tamil Leader | We Lead the Nation