காரணமாக தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரியில்லா அனுமதிப்பத்திரத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை சுங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 2023 ஆம் ஆண்டு தொடர்பான செயற்றிறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.
அந்தத் தகவலின்படி, கடந்த நாடாளுமன்றத்தின் 10 எம்.பி.க்கள் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுள்ளனர்.
வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அனுமதிக்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுடன், எதிரணி உறுப்பினர் ஒருவர் வாகன அனுமதிப்பத்திரத்தை அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரும் காணொளியும் இப்போது இணையத்தில் பரவியது.


