Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இரண்டு யுவதிகள் உட்பட 10 பேர் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 18, 2022 • 3:52 AM

இரண்டு யுவதிகள் உட்பட 10 பேர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
  • கைது செய்யப்பட்டவர்களில் 02 படகோட்டிகள் உட்பட 04 ஆண்களும் , 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 பேரும் உள்ளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
  • மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை, நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோர பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:



நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை, நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோர பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS புவனேகாவின் P 175 இன் கரையோர ரோந்துக் கப்பல் நேற்று குருசபாடு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு படகு ஒன்றை இடைமறித்து மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தமைக்காக கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 02 படகோட்டிகள் உட்பட 04 ஆண்களும் , 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 பேரும் உள்ளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இரண்டு யுவதிகள் உட்பட 10 பேர் கைது! | Tamil Leader | We Lead the Nation