செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்தல், நிர்மாணத் துறைக்கு அனுமதி பெறுதல், வணிகச் சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், நாடுகடந்த வர்த்தகம், வரி செலுத்துதல், உள்ளிட்ட 8 துறைகளின் அடிப்படையில் இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வணிக நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த செயலணிகள் செயற்படும்.
இந்நிகழ்வில் மேற்படி செயலணிகளின் தலைவர்கள் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 74 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் அரசாங்கத்தின் நீண்டகால முயற்சிகளில் இது மற்றுமொரு மைல்கல்லாகும் என்று குறிப்பிட்டார். ஆட்சி மாறும்போது அதன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிக்கும் விடயம் எனவும், அவ்வாறு காலத்திற்கேற்ற, நிறுவன ரீதியான அவசிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமையினால் இன்று நாம் அவதியுற நேரிட்டுள்ளமை வருத்தமளிக்கிறது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சியே காண்டா, நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம்.வீரகோன், ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பிம்பா திலகரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சரத் ராஜபத்திரன, இலங்கை வணிக சபையின் உப தலைவர் துமிந்த ஹுலங்கம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியால் 08 செயலணிகள் நியமிப்பு
T
The Leader Desk
செப்டம்பர் 1, 2022 • 4:22 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
- புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்தல், நிர்மாணத் துறைக்கு அனுமதி பெறுதல், வணிகச் சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், நாடுகடந்த வர்த்தகம், வரி செலுத்துதல், உள்ளிட்ட 8 துறைகளின் அடிப்படையில் இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இந்நிகழ்வில் மேற்படி செயலணிகளின் தலைவர்கள் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 74 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

