Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

ஜொன்ஸ்டன் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்லத் தடை!

T

The Leader Desk

ஜனவரி 4, 2026 • 7:23 AM

ஜொன்ஸ்டன் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்லத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நால்வருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாடு செல்ல வத்தளை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சத்தோச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தி இரண்டு இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம் (ரூபா 244,000) நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
  • இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
  • எவ்வாறாயினும், இந்த வழக்கின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று பொலிஸாரைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நால்வருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாடு செல்ல வத்தளை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ, சத்தோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமால மற்றும் சத்தோச லொறி சாரதி சமன் ஆகியோருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சத்தோச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தி இரண்டு இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம் (ரூபா 244,000) நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று பொலிஸாரைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஏற்கனவே விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜொஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...