இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 கல்வியாண்டின் முதலாம் தவணையானது, கடந்த டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை கடந்த டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26 ஆம் திகதியும் நிறைவு செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


