Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க விரைவில் ஐதேக - ஐமச கூட்டணி!

T

The Leader Desk

ஜனவரி 2, 2026 • 6:18 AM

மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க விரைவில் ஐதேக - ஐமச கூட்டணி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
  • தலைமைத்துவத்திற்கு அதிக மக்கள் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளது." "அதேபோல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் முதிர்ச்சிக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் பின்வருமாறு கூறினார்:

"ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகளின் பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்றுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருத்தமான நேரத்தில் இரு கட்சிகளும் ஒன்றிணையும். அத்துடன் இரு கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகவும் செயற்பட முடியும். தலைமைத்துவத்திற்கு அதிக மக்கள் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளது."

"அதேபோல் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் முதிர்ச்சிக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும். எப்படியிருந்தாலும் இரு கட்சிகளும் நிச்சயமாக ஒன்றிணையும். மாகாண சபைத் தேர்தலில் அதிக வாக்குகளை எம்மால் பெற முடியும். இந்த ஆண்டு ஒரு தீர்மானமிக்க ஆண்டு. எனவே அரசாங்கத்தின் பலத்தை அறிந்துகொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்."

"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் ஏதேனும் இருந்தால், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. மோசடி மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வர நல்லாட்சி அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது.

"நாட்டில் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். அத்துடன் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் விசேட நீதிமன்றமொன்றை நிறுவ வேண்டும்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...