உலகச் சந்த நிலவரப்படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டியிருந்த போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தடவை விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லிட்ரோ 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் உள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகத் தொடர்கிறது.
இருப்பினும், நேற்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் (Laugfs) எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் லாப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,250 ரூபாயாகும்.
அத்துடன் 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,710 ரூபாயாகும்.
இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இந்த வாரத்திற்குள் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


