பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளுக்கு வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் இது 13% பெறுமதி சேர் வரி (VAT) ஆகும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் நடைமுறையிலிருந்த 'ஒற்றைக் குழந்தை' கொள்கையினால், கடந்த தசாப்தத்தில் அந்நாட்டில் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் ஒற்றைக் குழந்தை கொள்கை வரம்பை மூன்று குழந்தைக் கொள்கையாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மாகாண மட்டத்தில் IVF சிகிச்சைகளுக்கான தள்ளுபடிகள் மற்றும் மேலதிக குழந்தைகளுக்கான பண மானியங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில உள்ளூராட்சி நிறுவனங்கள், புதுமணத் தம்பதிகளை ஊக்குவிப்பதற்காக மேலதிக சம்பளத்துடனான விடுமுறைகளையும் வழங்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் அரசாங்கம் முதலாவது தேசிய சிறுவர் பராமரிப்பு மானியத் திட்டத்திற்காக 90 பில்லியன் யுவான் (12.7 பில்லியன் டொலர்) ஒதுக்கீடு செய்துள்ளதுடன், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் வழங்கவும் தீர்மானித்துள்ளது.


