Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு எவ்வித விசேட வசதிகளும் இல்லை!

T

The Leader Desk

ஜனவரி 1, 2026 • 6:55 AM

சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு எவ்வித விசேட வசதிகளும் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
  • மஹர சிறைச்சாலையினுள் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • நேற்று முன்தினம் (28) மாலை மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலில் சிறைச்சாலை வைத்தியரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்டு ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அரசாங்கத்தினால் அவருக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் கைக்குக் கிடைத்த சம்பவம் தொடர்பில், ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எழுத்து அளவு:

வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அவருக்கு எந்தவித விசேட வசதிகளும் வழங்கப்படவில்லை.

மஹர சிறைச்சாலையினுள் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (28) மாலை மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலில் சிறைச்சாலை வைத்தியரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்டு ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் மருத்துவ சிகிச்சைக்காக அவர் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தினால் அவருக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் கைக்குக் கிடைத்த சம்பவம் தொடர்பில், ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...