நிலாவின் மேற்பரப்பு, பாறைகளாலும்

மண்ணாலும் ஆன சாம்பல் நிற அமைப்பை உடையது.

மினி நிலவு, நிலவைவிட1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது என்பதால் நிலவு போல் ஜொலிக்காது.

ஆம்! அப்படி ஒரு அதிசயம் வானில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுகிறது.

அதுபற்றி பார்ப்போம்.

நிலவு தோன்றியது எப்படி?

நாம் வாழும் பூமியும், இந்த பூமி இருக்கும் பிரபஞ்சமும் (யூனிவர்ஸ்) நமது கற்பனைக்கு எட்ட முடியாத அதிசயத்தக்க ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தில் சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேலான பால்வெளி மண்டலங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நாம் வாழும் சூரிய குடும்ப பால்வெளி மண்டலம். அதில் ஒரு பகுதி தான் நாம் வாழும் பூமி. இந்த பூமியில் இருந்து நாம் தினமும் சூரியனையும், நிலாவையும் பார்க்கிறோம். இந்த நிலா, ஒரு துணை கோள். அதாவது சூரியனை சுற்றுவது கோள்கள். அந்த கோள்களை சுற்றுவது துணை கோள்கள் என்கிறோம்.

இந்த நிலா என்ற துணை கோள் எப்படி தோன்றியது? என்பது குறித்து விஞ்ஞானிகள் சொல்லும் தகவல்கள் சுவராசியமானது. அதாவது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமி மீது, தியா எனப்படும் பூமியின் அளவிற்கு சமமான ஒரு விண்கல் அதிவேகத்தில் மோதியது. அதன் விளைவாக, பூமியின் வெளிப்புற பாகங்களில் இருந்து பெரிய அளவில் பாறைகள் விண்வெளியில் சிதறியன. இந்த சிதறல் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பாறைக் கோளமாக உருவாகியது. இதுவே தற்போது நாம் பார்த்து ரசிக்கும் நிலவு.

நிலாவின் மேற்பரப்பு, பாறைகளாலும், மண்ணாலும் ஆன சாம்பல் நிற அமைப்பை உடையது. எனவே இது இயற்கையாக ஒளிராது. சூரியனின் ஒளி, இந்த நிலவின் மேற்பரப்பில் பட்டு, அது பூமிக்குத் திரும்புகிறது. எனவே இரவு நேரங்களில் நிலா மின்னுவது போல் நமக்கு தோன்றுகிறது.

நாம் இதுவரை ஒற்றை நிலாவைதான் பார்த்து வருகிறோம். நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) 2 நிலவுகளை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் மினி நிலவு (2024 பிடி5-ஐ) என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியின் அருகே, சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் வர இருக்கிறது. இது சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறையாகும். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்பும். அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும்.

ஆனால் இந்த மினி நிலவு, நிலவைவிட1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது என்பதால் நிலவு போல் ஜொலிக்காது.

நிலாவை வெறும் கண்ணால் பார்க்கலாம். ஆனால் மினி நிலவை தொலைநோக்கி மூலம் மட்டுமே காணலாம். எனவே தொலைநோக்கி மூலம் வானை பார்த்தால் ஒரு பெரிய நிலாவும், ஒரு சிறிய நிலாவும் அழகாக தெரியும். இந்த 2-வது நிலாவை வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை கண்டுகளிக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாம் வாழும் பூமி என்பது, பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறிய பகுதி. அதனை சரியாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் அளவு என்பது பிரபஞ்சத்தின் மொத்த அளவில் 0.00000000000145 சதவீதம் மட்டுமே ஆகும். அதில் இருந்தே பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web