ஜனாதிபதி விக்கிரமசிங்க, அண்மையில் நுவரெலியாவுக்குச் சென்றிருந்தார். வருட இறுதியில்தான் கொழும்புக்கு வந்தார். ரணில் அங்கு

அப்படி நிதானமாக இருந்தபோது, மொட்டுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரிடமிருந்து அழைப்பொன்று கிடைத்துள்ளது.

“சர், இப்போ தம்மிக்கவை கொண்டுவரப் பார்க்கிறாங்க. அதற்காக அவரிடம் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்று, அந்த எம்பி குறிப்பிட்டுள்ளார். அதற்கு இயல்பாக பதிலளித்துள்ள ஜனாதிபதி, “ஆமாம், நானும் கேள்விப்பட்டேன், இந்தியாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்தை மேற்கொண்ட நிறுவனத்திற்கு அவர் தனது பிரச்சாரத்தை வழங்கப் போவதாகவும் கூறப்படுகிறது” என்றார்.

“ஆனால், நாங்கள் தம்மிக்கவுக்கு உதவவில்லை. நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்' என்றார் மொட்டு எம்பி. "நீங்கள் கவலைப்படாமல் இருங்க. இன்னும் 7, 8 மாதங்கள்தான் உள்ளன, ஏப்ரலுக்குப் பின் பாருங்களேன். நீங்கள் சொல்லும் எவரும் தேர்தலுக்கு வரமாட்டார்கள்” என்று, ஜனாதிபதி ரணில் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வியத்கமவில் முன் வரிசையில் அமர்ந்திருந்த வர்த்தக நண்பர்கள், வெற்றி பெற்றவுடன் கோட்டாவுக்கு அசைக்க முடியாத கயிறை வழங்கினர். “எங்களுக்கு வரிச்சலுகை கொடுங்கள், பொருளாதாரத்தை மேம்படுத்துவோம், மக்களுக்கும் சலுகை தருவோம்” என்றார்கள். 700 பில்லியன் ரூபாய்கள் அதாவது வருடத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய தோற்றுவிட்டாரென்பது, நாடு வங்குரோத்தாகி மக்கள் வீதிக்கு வந்தபோதுதான் தெரியவந்தது.

04 வருடங்களில் 2 இலட்சத்து 80 ஆயிரம் கோடி என்ற பாரிய தொகையாக இருந்தும் ரணில் அந்த நஷ்டத்தை அலட்சியம் செய்தார். புதிய வரி முறைகளைக் கொண்டுவந்து, 36 சதவீத வரி விதிப்பின் மூலம், நாட்டைச் சுரண்டிய கோட்டாவின் நண்பர்களுக்கு ஆப்பு வைத்தார். அதன்மூலம், 2023ஆம் ஆண்டில் அதிகபட்ச வருவாய் திரட்டிய ஆண்டாக 2023 மாற்றப்பட்டது. இதை அறியாத ட்யூப்காரர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள், அப்படிச் செய்த தந்திர நரியையும் நாட்டுக்கு உண்மையைக் காட்டிய எழுத்தாளரையும் கொச்சைப்படுத்தினர்.

நாட்டை இரண்டு முறை இரத்த ஆறாக்கி, ஒரு லட்சம் உயிர்களைக் காவுகொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கி நாட்டைச் சூறையாடிய அவர்களின் அரசியல் அப்படித்தான். வரி திருடர்களை ரணில் பாது காக்கிறார் என்ற அவதூறுக்கு பேராசிரியர் ஆஷு மாரசிங்க பதிலளித்தார்.

வரித் திருடர்களை ரணில் பாதுகாக்கிறார் என்ற அவதூறுக்கு, பேராசிரியர் ஆஷு மாரசிங்க பதிலளித்தார். ஜனாதிபதிக்கான கனவு கண்டுகொண்டிருக்கும் சிறு கட்சியொன்று ஜனாதிபதிக்கு சேறுபுச எண்ணியதால், வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய ஆண்டாக 2023 ஐ அவர் மாற்றினார். மூவாயிரத்து பன்னிரெண்டு பில்லியன் ரூபாய் வருமானம் அந்தாண்டில் ஈட்டப்பட்டுள்ளது. அரசியல் எதிர்காலத்துக்காக பிரசித்திபெற்ற தீர்மானங்களை எடுக்காமல், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து அவர் முடிவுகளை எடுத்தார்” என்று, பேராசிரியர் ஆஸு மாரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

அப்படித்தான் கியூவில் செத்துக்கொண்டிருந்த ஒரு நாட்டைக் கைப்பற்றிய ரணில் ரயிலின் கடைசிப் பெட்டியில் கழுத்தைப் போட்டார். உணவின்றி தவித்த மக்கள், கடந்த கிறிஸ்மஸ் நீண்ட விடுமுறையின்போது, நாடு தழுவிய ரீதியில் சுற்றுலா சென்றனர். மைத்திரி நோனாவுடன் ரணிலும் நுவரெலியா சென்றார். இது ஓய்வெடுப்பதை விட பிஸியான காலம். ஆனால் ரணில், அலைபேசியிலும் இணையத்தளத்திலும் சிறந்த விளையாட்டை விளையாடினார்.

ராஜபக்ஷர்களை வணங்கிய நளின் சில்வா, அண்மையில் மைக் டைசனை வரைந்திருந்தார். "ஜனாதிபதி தேர்தல் நடக்காது, பொதுத்தேர்தல் நடக்கும்" என்கிறார் நளின். அந்தக் குரல், மாளிகாவத்தை மர ஆலையில் இருந்து கேட்டதா அல்லது ராஜபக்ஷவின் சாப்பாட்டு மேசையில் இருந்து வந்ததா, அல்லது போட்டு வாங்கும் தோரணையா என்பது தெரியவில்லை. பதில் என்ற சொல்லை அழித்து, பொலிஸ் மா அதிபர் என்ற பதவியைப் பெறுவதற்காக, பாதாள உலகக் கோஷ்டியினரைப் பிடித்து, போதைப்பொருளை அழிக்கும் திட்டத்தைக் கையிலெடுத்த தேசபந்து, அதனை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றார்.

இந்தத் திட்டம் நிறுத்தாமல் முன்னெடுக்கப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலின்போது தந்திர நரிக்குச் சாதகமாகக்கூடிய இத்திட்டம் மாற வாய்ப்பிருக்கிறது. யுக்திய திட்டத்தால் நரிகளும் குள்ளநரிகளும் வெற்றிபெறுமென ரணில், டிரான், தேஷபந்து ஆகியோர் நினைத்திருந்தாலும், அதுவன்றி நாடுதான் வெற்றிபெறப்போகிறதென்பது உண்மை.

சஜித்தின் நட்பு நிறுவனத்தின் கீழ் ஐமச!

2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், அரசியல் மேடைகளில் சூடுபிடிக்கத் தேவையான சூழலை அமைத்துக் கொடுக்கும் விடயங்கள் நிறையவே காணப்படுகின்றன. அதில் முக்கிய விடயம் யாதெனில், இந்தாண்டு அதாவது 2024 என்பது, தேர்தல் ஆண்டாக இருக்கும். குளிர்ந்த கிறிஸ்துமஸ் காலம் முடிந்து புத்தாண்டு பிறந்துள்ளதால், அரசியல் களம் படிப்படியாக சூடுபிடித்துள்ளது. இந்நாட்களில் கட்சிகளின் பிரதான தலைப்பே புதிய ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றியதாக உள்ளது.  மரண வீடுகளிலும் அன்னதான நிகழ்வுகளிலும்கூட இதே கதைதான்.

சஜித் பிரேமதாசவின் வலதுகையாகக் கருதப்படும் லக்ஷ்மன் பொன்சேகாவின் ஏக்கல தொழிற்சாலையில், அண்மையில் பிரார்த்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது. ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துபோன லக்கியின் அம்மாவின் நினைவுதினமாக அது இருந்தது. நினைவுதினம் என்று அழைக்கப்பட்டாலும், அது அரசியல்வாதிகளின் சிறப்புக் கூட்டமாகவே காணப்பட்டது. சஜித் பிரேமதாச போன்று சஜித்தின் நண்பர்களும் வந்துள்ளனர். அவர்களில் அமைச்சர் டிரானும் முன்னாள் அமைச்சர் கம்மன்பிலவும் ஒருவர்.

இங்கு டலஸ் அணியிலிருந்து ஐமசவில் இணைய வந்தவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு ஜிஎல், ஷன்ன ஜயசுமன, டிலான் பெரேரா, களுத்துறை அகில எல்லாவல. நாலக்க கொடஹேவா ஆகியோர் அங்கு இருக்கவில்லை. இந்நாட்களில் நாலக்கவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஐமசவிலிருந்தும் சில பேர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் லக்கியின் நண்பர்கள். அவர்களுள் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல்கள், வைஸ் அட்மிரல்கள் மற்றும் பலர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சஜித்துடன் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சஜித்தின் பிரச்சார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க, “நாங்கள் விரைவில் மாவட்ட மட்டத்தில் முன்னாள் இராணுவ தலைவர்களின் அமைப்புகளை உருவாக்குவோம்” என்று அக்குழுவிடம் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் இல்லாத இராணுவத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளை திரட்டி மாவட்ட மட்டத்தில் அமைப்பு வலையமைப்பை திசைக்காட்டி உருவாக்கி வருகின்றது. இப்போது சுஜீவவும் அதைத்தான் செய்யப்பார்க்கிறார்.

அதாவது, திசைக்காட்டி பெரும் சவாலுக்குரியதென்பதை ஐமச ஏற்றுக்கொண்டுள்ளதா? இல்லாவிடின், ஜேவிபியின் அநுரகுமார தரப்பு முன்னெடுத்துவரும் பிரச்சாரப் பணிகளை பைபாஸ் செய்யத்தான் ஐமச முயற்சிக்கின்றதா?

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி