மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மேல் மாகாணத்தில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Feature

கம்பளை, பன்விலதென்ன பிரதேசத்தில் இன்று (21) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர்

Feature

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Feature

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Feature

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி