Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முன்னாள் IGP நஷ்டஈட்டை முழுமையாகச் செலுத்தினார்!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2024 • 10:53 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முன்னாள் IGP நஷ்டஈட்டை முழுமையாகச் செலுத்தினார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நஷ்டஈடான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அந்த தொகையை செலுத்தினார்.
  • குறித்த முழுத் தொகையையும் 8 தடவைகளில் இவர் செலுத்தியுள்ளார்.
  • இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நட்டஈட்டு கொடுப்பனவை ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் முழுமையாக செலுத்தியிருந்தார்.
எழுத்து அளவு:

தொடர்பில் உயர்  நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட  நஷ்டஈடான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் திகதி அந்த தொகையை செலுத்தினார்.
குறித்த முழுத் தொகையையும் 8 தடவைகளில் இவர் செலுத்தியுள்ளார்.
 
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நட்டஈட்டு கொடுப்பனவை ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் முழுமையாக செலுத்தியிருந்தார்.
 
இது தவிர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோரும் உரிய நட்டஈட்டை செலுத்தியுள்ளனர். 
 
2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் போதிய உளவுத்துறை தகவலைப் பெற்றிருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
அதாவது 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும்  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும் முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிரவுக்கு 75 மில்லியன் ரூபாவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
 
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனக்கு இதுவரையில் நட்டஈடு செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முன்னாள் IGP நஷ்டஈட்டை முழுமையாகச் செலுத்தினார்! | Tamil Leader | We Lead the Nation