பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வடிவேல் சுரேஸ் எம்.பி, தனது தீர்மானத்தின் மூலம், பசறை பிரதேச இளைஞர்களுக்கு, எதிர்கால அரசியல் தொடர்பில் நம்பிக்கை ஏற்படுமென்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச புதிய அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி