“இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசாங்கத்தில் உள்ளவர்களின் நடத்தையால் ஜனாதிபதிக்கு

அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. எனவே, மிக விரைவில் பொதுத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஊழல்வாதிகளும், மோசடியாளர்களும் அரசாங்கத்தில் நிறைந்து காணப்படுகின்றபோது அந்த அரசாங்கத்தில் மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்? மக்கள் ஆணையுள்ள பலமான அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் பொறுப்புடன் இதனைக் கூறுகின்றேன்.

“பொதுத் தேர்தலைப் பிற்போட எவரும் முயற்சிக்கக்கூடாது. இந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்தும் அதிகாரம் தற்போதைய ஜனாதிபதிக்கு உண்டு” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி