அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக கொழும்பு
நகரம் உட்பட பல பகுதிகளுக்கு நாளை (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.