18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை தண்டிக்குமாறு

கோரி, சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1998 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவன சமர்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்றது.

1998 ஆம் ஆண்டு தென் கொரியாவில் 18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிரதிவாதியை விடுவிக்க கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி