தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி, இன்று (21) நுவரெலியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இன்று கொண்டாடப்படும் தேசிய தேயிலை தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளால், இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஒரு வீடு கூட இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் நீதி வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.