இனிமேல் தனது புகைப்படங்களை  கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அறிவுறுத்தியுள்ளார். 

மேலும்,  சுவரொட்டிகளில்  தமது புகைப்படத்தை பொறிப்பதை   அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ள ஜனாதிபதி கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்களில்  இருந்து விலகி   மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு  கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களிடம்  வேண்டுகோள் விடுத்தார்.

இன்று (08) மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு  உரையாற்றுகயைில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

அங்கு மேலும்  உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்தாண்டு திட்டத்தில் கிழக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பலப்படுத்தப்படும் எனவும், விடுபட்ட இரண்டு மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  நிலாவெளியில் இருந்து பானம  வரையிலான விரிவான சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்று  அமுல்படுத்தப்படும் எனவும்  தெரிவித்தார்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி