சுங்க சட்டத்தை மீறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்களையும் பாராளுமன்றத்தையும் அவமதித்துள்ளார். இலங்கை

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஏழு கோடியே 50 லட்சம் பெறுமதிவாய்ந்த மூன்றரை கிலோ தங்க பிஸ்கட்கள், ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டத்திற்கு புறம்பான விதத்தில் நாட்டுக்கு கொண்டு வந்தபோது கைதான சம்பவம் மிகவும் பாரதூரமான விடயமாகவே எமது அமைப்பு கருதுகின்றது. இது தொடர்பில் மிகுந்த வருத்தம் அடையும் அதே வேலை, ஒரு நாடு என்ற வகையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகவும் நாம் இதை கருதுகின்றோம்.

"கௌரவ உறுப்பினர்" என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தை பயன்படுத்தி செய்திருக்கும் இந்த செயலானது இந்த நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்து வரும் ஊழல் செயல்களின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம். இந்த செயலின் காரணமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுப்படுத்தியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்ணியமிக்க உறுப்பினர்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை இவர்கள் போன்ற நபர்களின் செயல்களினால் கண்ணியம்மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மேலும் இந்த செயலானது வெறுமென சுங்க சட்டத்தை மீறிய செயலாக மட்டும் கருதக்கூடியது அல்ல என்பதும் புலனாகின்றது. இதனூடாக நாட்டின் அந்நியச் செலாவணி சட்டங்களும் மீறப்பட்டு இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இடம்பெற்றிருக்குமாயின் அது பாரிய குற்றமாகும். ஆகையால் நாட்டின் பொறுப்புடைய தரப்புகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அதே வேலை, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி தராதரங்கள் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

கரு ஜயசூரிய,
தலைவர்,
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி