நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில்

நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

" நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா - கந்தபளை ரயில் நிலையத்துக்கிடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு வரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும். " எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல வரை செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடினார். ரயில் நிலைய அதிகாரிகளையும் சந்தித்தார்.

  • மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி