உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.

இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில சபைகளுக்கு யானை சின்னத்திலும், சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின் கீழும் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் நடத்தப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் காலத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கான பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான பொது இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றக்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல ஆகியோரின் பங்கேற்றது டன் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி