பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டமைப்பக்குள் மிக அதிகளவில் பரவலடைந்து வரும் ஐஸ்

போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்டிஎஃப்) ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைக் கட்டமைப்பில் தரம் 8 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களில் சிலரும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த சில இளைஞர் யுவதிகளும் இந்த போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று, தேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் தூக்கமின்றி கண் விழித்து இரவு முழுவதும் கல்வி கற்க முடியுமென்று பரப்பப்பட்டு வரும் வதந்தியே இந்தப் போதைப்பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்திருக்கக் காரணமென்று புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என்றும் இதற்காக மாணவர்களுக்கு கடனாக போதைப்பொருளை வழங்கும் போதைப்பொருள் வியாபாரிகள், அம்மாணவர்கள் அதற்கு அடிமையான பின்னர் அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

சில மதஸ்தலங்களைச் சேர்ந்த மதகுருமார்கள், சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிலரும் இந்த ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் வியாபித்து வரும் இந்தப் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி