திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளை

மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய 300 மொகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு 900 மொகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சார உற்பத்திக்காக 3 கப்பல்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் நுரைச்சோலை நிலையத்தின் மூன்று அலகுகளும் செயற்படுமாயின் குறித்த நிலக்கரி 24 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி