நாட்டினுள் சர்வாதிகார ஆட்சியை தாபிப்பதற்காக நிறைவேற்றப்பட்டிருந்த 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை வலுவிழக்க செய்து, இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை ஜனநாயகத்தை போற்றும் அனைத்து பிரஜைகளும் பெற்ற வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.

அதற்காக அற்பணிப்புடன் செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

முன்னாள் ஜனாதிபதியின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்திலும், அதை நிறைவேற்றியதற்கு பின்னும் அதற்கு எதிராக எமது அமைப்பு செயல்பட்டது.

ஆனாலும் நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் கௌரவத்தையும், எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் முழுமை பெற்ற அரசியலமைப்பாகவோ, இறுதியான முடிவாகவோ 22 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கருத முடியாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இன்றைய தினத்தில் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முடிவை, புதியதொரு அரசியல் அமைப்பை நிறைவேற்றிக்கொள்ளும் வரை மேற்கொள்ளப்படவேண்டிய இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாகவே நாம் கருதுகின்றோம். அதன் காரணத்தினாலேயே நாம் இதை வெற்றியாக குறிப்பிட்டோம்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களின் கௌரவத்தையும், நாட்டின் நலனையும் பேணிப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்காக குரல் கொடுத்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள், சுதந்திரம் போன்ற விடயங்களை பாதுகாக்கும் கடமை எம் அனைவருக்கும் இருக்கின்றது.

இன்றைய தினத்தில் பெற்ற இந்த வெற்றியை அதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு நாட்டின் அனைத்து அரசியல் சக்திகளிடனும் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கும், பெருமளவிலான ஊழல் நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எதிர்காலத்திலும் முன்னோடியாக செயல்படும்.

கரு ஜயசூரிய
தலைவர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி