2022ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டிணி சுட்டெண்ணில் இலங்கை 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டிணி சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின்படி 13.6 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 116 நாடுகள் இடம்பெற்றிருந்ததுடன், அதில் இலங்கை 65வது இடத்தில் காணப்பட்டது.

வளரும் நாடுகளைப் பயன்படுத்தி அயர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள இரண்டு அமைப்புகளால் ஆண்டுதோறும் இந்த உலகளாவிய பட்டினி சுட்டெண் தயாரிக்கப்படுகிறது.

நாடுகளில் உணவு பற்றாக்குறை, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, சரிவிகித உணவு வழங்கும் திறன், வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்ற பிரச்சினைகள் இங்கு பரிசீலிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பட்டினி குறியீட்டில் தெற்காசிய நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்து 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி