சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளது.



நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இந்த குழுவில், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வருடாந்த மாநாடு நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது, ​​இலங்கைப் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போது, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதி  மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கமளிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி