22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை (06) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனினும், 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பொதுஜன பெரமுன தற்போது மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே உள்ளது. 

பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு நேற்று கூடியபோது, 22 ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. 

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக 19 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்சென்ற முற்போக்கான திருத்தம் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறியதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்தது.

இன்று மீண்டும் நீதி அமைச்சர் ஆளும் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதன்போது, நாளைய தினத்தில் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் உறுதிப்படுத்தவில்லை.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி