ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில்,கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கான நியமனம் இன்று வழங்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்ற அமர்வில் இதனைத் தெரிவித்தார்.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.

அதன் உறுப்பினர்களில் மாற்றம் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோபா மற்றும் கோப் குழுக்களுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி