இன்று(28), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அதற்கமைய, A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்றாவது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளமையினால் 270 மெகாவாட் மின்சாரம் மாத்திரமே தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது.

மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகளை 5 நாட்களின் பின்னரே வழமைக்கு கொண்டு வர முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி