சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய-பசிபிக் பிராந்தியக் குழுவின் 7வது மாநாடு, இன்று (16) கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில், பிரதமர்

கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் தொடங்கியது.

“பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், இலங்கை இணைத் தலைமைத்துவம் வகித்தது.

பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். இதில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் குமார ஜயக்கொடி, 2030ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடைய இலங்கை முன்னெடுத்து வரும் "சூரிய சக்திக்கான போராட்டம்" திட்டம் குறித்து விளக்கியுள்ளார்.

மாநாட்டில், மொரட்டுவ பல்கலைக்கழகம் சூரிய வலுசக்தி புத்தகத்திற்கான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அறிவிக்கப்பட்டது.

சூரிய சக்தி தொழில்நுட்பம், பிராந்திய அபிவிருத்தி மற்றும் சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளில் பயன்படும் வகையில், தாக்கம் மற்றும் புத்தாக்கக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ISA இயக்குநர், மற்றும் 124 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி