உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை
அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உறுப்பினர்கள் சபையில் பங்கேற்காமை, உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியது மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக குறித்த சபைகளில் அதிகாரம் நிறுவப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, வனாத்தவில்லு பிரதேச சபையின் அதிகாரம் இன்றுவரை நிறுவப்படவில்லை.
முழு உறுப்பினர்களில் 50% வீதமானவர்கள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாலும் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதன் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகியுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே 6ஆம் திகதி 337 உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடைபெற்ற நிலையில், இதில் சுமார் 8,000 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-தெரண