தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்த பந்துல எனப்படும் தந்தம் கொண்ட யானை உயிரிழந்தது.79 வயதை கடந்திருந்த போது குறித்த யானை உயிரிழந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயற்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

1943ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் பிறந்த இந்த யானை, தமது மூன்றாவது வயதில் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1949ஆம் ஆண்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி