சீனாவில் முதலாவது குரங்கம்மை தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷொன்கிங் நகரத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட குறித்த தொற்றாளர் வௌிநாடு ஒன்றில் இருந்து அங்கு சென்றவர் என தெரியவந்துள்ளது.

குறித்த தொற்றாளர் சீனாவுக்குள் நுழைந்த மாத்திரத்தில் அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை காரணமாக சமூகத்தில் தொற்று பரவும் சாத்தியம் இல்லாமல் போனதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கிபொக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று முதன்முதலாக ஆபிரிக்க வலயத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் சுமார் 61 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி