ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.அதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜனாதிபதி உரிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும்.

நிதி இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகமவும் தற்போது செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி