இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.


கூட்டுத் தீர்மானமாக தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோனுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதிக் கூட்டம் நேற்று (04) இரவு விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமையால் தேசிய விளையாட்டு சபையின் தற்போதைய உறுப்பினர்கள் இராஜினாமா செய்வதால் பிரச்சினை ஏற்படாது என விளையாட்டு சபையில் உறுப்பினர் மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சருக்கு இதற்கென புதிய உறுப்பினர்கள் நியமிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக் கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு சபையை நியமித்திருந்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி