இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போதைய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அரசின் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அதேவேளை, அங்காகாங்தே மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.


இதனிடையே , இராஜாங்க அமைச்சர் கனகஹேரத்தின் வாகனத்தினை பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேகாலை ரன்வவவில் சமையல் எரிவாயுவிற்காக வீதியில் காத்திருந்த மக்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமைச்சர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவேளை அந்த பகுதியில்காணப்பட்ட மக்கள் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு பின்னர் அந்த பகுதியை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவியதோடு, நீண்ட நேரம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெறுக்கடிக்கு இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்காத அரசு மக்களின் சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் தற்போதைய அரசு தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி