முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற  படை வீரர்களை சுற்றுலா

விசாவில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தும் ஆள் கடத்தல் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலர் பலத்த காயமடைந்து, ஆதரவற்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் அல்லது   அதற்கு ஆதரவான ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், கடற்படைத் தலைமையகத்தின் 011-7192142 அல்லது 011-7192250 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு கடற்படை கோரியுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி