நாட்டின் தற்போதைய அரசாங்கம் தற்பெருமையில், நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டன் காரணமாக நாட்டை முற்றாக அதளபாதாளத்திற்குள் தள்ளியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வா இதனை கூறியுள்ளார்.

வங்கிகள் மிகவும் பலவீனமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன. எங்கிருந்தும் டொலர்களை பெற முடியாத காரணத்தினால், கைமாற்றாக நாடுகளிடம் இருந்து டொலர்களை பெறுகின்றனர்.

40 வீதம் முதல் 45 வீத வட்டியில் டொலர்களை பெறுகின்றனர். புள்ளிவிபரங்களை சமப்படுத்துவதற்காக மக்களுக்கு கடும் தொந்தரவுகளை கொடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை டொலரின் விலையை 200 ரூபாய் என்ற நிலையில் வைத்திருக்கின்றனர்.

ரூபாயை மிதக்க விட்டால், டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் முதல் 240 வரை அதிகரித்து, அரசாங்கத்தின் அனைத்து பொருளாதார நகர்வுகளும் தவறான திசை நோக்கி நகரும்.

பொருளாதார வளர்ச்சி வேகம், பணவீக்கம், மொத்த தேசிய உற்பத்திக்கு நிகரான கடன் என அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி செல்லும். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வாத இல்லையா என்று ஜனவரி 3 ஆம திகதி கலந்துரையாடவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை 13 மாதங்களுக்கு முன்னர் எடுத்திருக்க வேண்டும். அரசாங்கம் எந்த வகையிலும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவில்லை. கமத்தொழில், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் இதே நிலைமை.

தமது தற்பெருமைக்காக, தமக்கு அனைத்தும் தெரியும், நாங்களே நன்றாக செய்தோம் எனக் கூறி, முழு நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளியுள்ளனர். தயவு செய்து தற்போதாவது நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய பணியாற்றுங்கள் என ஹர்ச டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி