வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தமது சம்பளத்தை உயர்த்தக் கோரி தனியார் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்குவெல் லங்கா குழுமத்திற்குச் சொந்தமான ஜா-எல ஏகல தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வருகைப்பதிவு மற்றும் 3,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 14ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

"கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய, இரண்டு மாத போனஸ் வழங்க வேண்டும். கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக, ஒரு மாத போனஸ் வழங்கப்பட்டது. இந்த வருடமும் ஒன்றரை மாத போஸை வழங்குவதாக நிறுவனம் கூறுவதோடு, சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனத் தெரிவிக்கின்றது” என ஜா-எல ஏகல எஸ்குவெல் லங்கா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கும் சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

முன்னர் பொலிடெக்ஸ் லங்கா என அழைக்கப்பட்ட இந்நிறுவனம் பின்னர் நிர்வாக மாற்றத்தின் பின்னர் எஸ்குவெல் லங்கா என பெயர் மாற்றப்பட்டது.
FGt1NlsWUAIdX5qFGt1NltXEAIwxBP

ஹொங்கொங் முதலீட்டுடன், ஏற்றுமதி ஆடைகளை உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனம் ஏகல, கொக்கல மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை நடத்தி வருவதுடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் யக்கலையில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியது.

இந்த மூன்று தொழிற்சாலைகளிலும் 4,000ற்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

ஏகல மற்றும் கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கத்துடன், கேகாலை எஸ்குவெல் தொழிலாளர்கள் வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம் இணைந்துள்ளது.

"முற்பதிவுகள் 70 சதவிகிதம் குறைந்துள்ளதால் போனஸை உயர்த்த முடியாது என நிறுவனம் கூறுகிறது, ஆனால் அவர்கள் முற்பதிவுகள் இருக்கும்போது போனஸ் வழங்கவில்லை, அவர்கள் அனைத்து இலாபத்தையும் எடுத்துக் கொண்டார்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லையே, எனினும் சட்டத்தின்படி, இரண்டு மாத போனஸ் வழங்கப்பட வேண்டும், ”என அண்டன் மார்கஸ் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் இணக்கம் தெரிவிக்காத நிலையில், எஸ்குவெல் லங்கா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண தொழில் திணைக்களம் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்தது.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க டிசம்பர் 20ஆம் திகதி தொழில் ஆணையாளர்  நாயகத்துடன், சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்க தலைவர் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக வலைய பொது ஊழியர் சங்கத்தின் கூற்றுக்கு அமைய,  எஸ்குவெல் லங்கா நிறுவனம் சீனாவில் ஆடைகள் தயாரிக்க கைதிகளைப் பயன்படுத்தி தொழிலாளர் சட்டங்களை மீறியமைக்காக அமெரிக்காவில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி