பெலாரூஸுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுள் இராக்கைச் சேர்ந்த ஒரு யசீதி தம்பதியும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடக்கும் நம்பிக்கையில் பெலாரூஸ் நாட்டிற்கு பயணம் செய்தார்கள். எல்லைகளில் மூன்று கொடூரமான வாரங்களை கடந்த பின்னர், அவர்கள் தாயகம் திரும்பினர்; அவர்களின் சேமிப்புகள் செலவழிந்து விட்டன; ஆனால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்ய உறுதியாக உள்ளனர். இது குறித்து லினா ஐஸ்ஸாவும் பீட்டர் பாலும் எழுதுகின்றனர்.

தாயகத்திலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து, தாங்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துகள் பற்றி அந்த குடும்பம் அறிந்திருந்தது.

ஐரோப்பாவில் புதிய வாழ்க்கையை தொடங்கும் முயற்சியில், ஹுசைனும், அவரது மனைவி காசலாவும், தாயார் நாமியும், நடுங்கும் குளிரையும், கடினமான ஆற்றுப்பாதையையும், தொலைதூர காடுகளில் நீண்ட நடைப்பயணத்தையும் தாங்கினர்.

ஆனால், தாய்நாட்டில் அவர்கள் தாங்கிய துன்பங்களை விட, இந்த கடினமான பயணத்தை முயற்சிப்பது சிறந்தது என்று அவர்கள் நினைத்தனர்.

இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறதா ஐ.எஸ் ? - #BBCExclusive

ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா

ஹுசைனும் அவரது குடும்பமும் யசீதிகள் - 2014 ஆம் ஆண்டு வட இராக்கின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவினர் குறிவைக்கும் மரபுவழி குழு இது.

Hussein shows the scars on his stomach and ribs

2007ஆம் ஆண்டு வாகன வெடிகுண்டு தாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு அல்-கொய்தா தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களுடன் இருக்கும் ஹுசைன்

அவரின் குடும்பத்தில் பலரும் அவர்களிடம் அகப்பட்டுவிட்டனர் - ஆண்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டனர்.

மோசுல் பகுதியின் வடக்கிலுள்ள ஷர்யாவில், 36 வயதான ஹுசைன், 27 வயதான காசலா, மற்றும் 56 வயதான நாமி, புலம்பெயர்ந்தவர்களுக்கான கூடாரத்தில் பல ஆண்டுகளை கழித்தனர். ஆனால், பெலாரஸ் வழியாக ஜெர்மனியை அடையும் வாய்ப்பு பற்றி கேட்டபோது, அவர்கள் தங்கள் சேமிப்புகளை ஒன்று சேர்த்தனர், சொத்துகளை விற்றனர். ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை கொடுத்தனர்.

ஐரோப்பியாவை நோக்கிய பயணம்!

முதலில் அவர்கள் துருக்கிக்கு பேருந்தில் பயணித்தனர்; பின், அங்கிருந்து பெலாரூஸ் நாட்டின் தலைநகரமான மின்ஸ்க்கிற்கு பறந்தனர். அதன் மூலம், போலாந்துக்கோ லிதுவேனியாவுக்கோ நடைப்பயணமாக கடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்றனர்.

ஒன்றிய ஐரோப்பியாவில் குடியேறி நெருக்கடியை ஏற்படுத்தவே இந்த பாதையை வேண்டுமென்றே திறந்துவிட்டதாக பெலாரூஸின் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

"முதல் நாளில், எங்களின் ஒப்பந்தப்படி, நாங்கள் அந்த நிறுவனம் எங்களுக்காக ஒதுக்கிய ஒரு குடியிருப்புக்கு செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை; அதனால் நாங்கள் வெளியில் தங்கினோம்.", என்று ஹுசைன் கூறுகிறார். "அப்போது மிகவும் குளிராக இருந்தது. பிறகு, ஓர் இரவுக்கு 100 டாலர் என எங்களின் சொந்த செலவில் - நாங்கள் ஒரு அறையில் வாடகைக்கு இருந்தோம்".

தொலைதூர காட்டுப்பகுதிகளில் நடைப்பயணமாக எல்லைகளை கடக்க கடத்தல்காரர்களின் குழுவுக்கு அவர்கள் பணம் கொடுத்திருந்தனர்.

Map of Belarus and surrounding countries

Map of Belarus and surrounding countries

பெலாரூஸுக்கு சென்ற பின்னர், போலந்து அல்லது லிதுவேனியாவை முதலில் கடந்து, ஜெர்மனியை அடைய முயற்சி செய்த குடியேறிகள்

" எங்களுடன் வந்த வழிகாட்டிக்கு பலமுறை வழி தெரியாமல் போனது; எங்களுக்கு அது மிகவும் கடினமாக இருந்தது", என்று ஹுசைன் கூறுகிறார்.

"என் அம்மா குறித்து கவலையுற்றேன். அவருக்காக வேதனையடைந்தேன். குறிப்பாக அவர்கள் வேகமாக நடக்கும் போது, அவருக்கு கால்களில் வலி ஏற்பட்டிருக்கும்".

பெலாரூஸின் எல்லை காவலர்களும் அவர்களை பயமுறுத்த நாய்களை பயன்படுத்தினர்; இதனால் அவர்கள் சவால்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று ஹுசைன் கூறுகிறார்.

"அவர்கள் எங்களை தண்ணீரில் இருக்க செய்தனர். இதுவரையில்", என்று தனது மார்பை குறிப்பிட்டு காட்டுகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் லிதுவேனியா எல்லைப்புறத்தை அடையும் வரை, ஓடைகளிலும் ஆறுகளிலும் நீச்சலடித்து சென்றனர். பின்னர், அங்கிருந்து போலந்துக்கு சென்றனர். அங்கு கடத்தல்காரர்கள் வாக்களித்திருந்த படி, காருக்கு அவர்கள் அழைத்தனர்.

"நாங்கள் கடத்தல்காரர்களை அழைத்து, காரை அனுப்ப கேட்டோம். ஆனால், அவர்கள் அங்கு காவல்துறையின் ரோந்து நடப்பதாக கூறினர்", என்றார் ஹுசைன்.

"அவர்கள் ஒரு டாக்ஸியை அனுப்பி, "உங்கள் குழந்தைகளை இதில் அனுப்புங்கள்", என்றனர்".

ஆனால், அந்த குழுவில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக பயணத்திற்கு அனுப்ப தயாராக இல்லை.

அவர்கள் பெலாரஸில் கழித்த மூன்று வாரங்களில் இரண்டு முறை போலந்துக்கு சென்றதாகவும், ஆனால், இரண்டு முறையும் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஹுசைன் கூறுகிறார்.

"நாங்கள் அமைதியாக திரும்பினோம், அவர்கள் எங்களைத் தாக்கவில்லை" என்று ஹுசைன் கூறுகிறார்.

இந்த பயணங்களில் ஒன்றில், பெலாரஷ்யன் காட்டிற்குத் திரும்பிய பிறகு, காசலா மயக்கமடைந்தார். பெலாரூஸ்ய எல்லைக் காவலர்களால் அழைத்து வரப்பட்ட மருத்துவர், அவர் மன அழுத்தம், குளிர் மற்றும் பசியால் அவதிப்படுவதாக கூறினார்.

மக்கள் நேரடியாக போலந்திற்குள் செல்ல பெலாரஷ்ய அதிகாரிகள் உதவுவதையும் ஹுசைன் பார்த்தார்.

"பெலாரூஸ் அரசாங்கம் வேலியைத் திறந்து விட்டது," என்று அவர் கூறுகிறார்.

"எங்கள் நண்பர்கள் நான்கு பேர் உட்பட 600 பேர் கடந்து சென்றனர். பிறகு வேறு யாராவது கடக்க முயன்றால் அவர்களை அடிப்பார்கள்."

Migrants near a barbed wire fence

Migrants near a barbed wire fence

தொலைதூர எல்லை பகுதிகளில் குடியேறிகளை தள்ளி விடுவதாக பெலாரூஸ்ய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது

பெலாரூஸ் அதிகாரிகள் மீதமுள்ள 200 குடியேறிகளை வெவ்வேறு எல்லைப் பகுதிகளுக்கு மாற்றினர். சிலர் லிதுவேனியாவை ஒட்டிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஹுசைன் கூறுகிறார்.

அவர்கள் மின்ஸ்க்கிற்கு சுதந்திரமாக திரும்ப முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள் எங்களை நகரத்திற்குத் திரும்ப செல்லுமாறு செய்து, சிறிது ஓய்வு மற்றும் உணவைப் பெற அனுமதித்திருந்தால், நாங்கள் [ஜெர்மனிக்குச் செல்வதில்] வெற்றி பெற்றிருப்போம்".

"இடையில் மாட்டிக் கொண்டோம். அப்போது ஜீரோ டிகிரியாக இருந்தது, மழை பெய்து கொண்டிருந்தது. அங்கேயே இறந்து விடுவோம் என்று பயந்தோம்."

இராக்கிற்கு திரும்புதல்

தாய்நாட்டை விட்டு ஒரு மாதத்திற்கு மேலான பின்னர், இறுதியாக, அந்த குடும்பத்திடம் எந்த பணமும் இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட 20,000 டாலர்கள் செலவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் மின்ஸ்க்கிற்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நவம்பர் 18ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இராக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்களுள் இருந்தனர்.

map of Iraq

map of Iraq

அங்கு இர்பில் விமான நிலையத்திற்கு வந்தபோது, ஷர்யா கூடாரத்திற்கு திரும்பி செல்ல அவர்களிடம் பணம் இல்லை. ஒரு டாக்ஸி ஓட்டுநர் இறக்கம் காட்டும் வரையில், அவர்கள் விமான நிலையத்தின் வெளியிலுள்ள நடைப்பாதையில் அமர்ந்திருந்தனர்.

விமான நிலையத்தில் பிபிசி அவர்களுடன் பேசியது. பின்னர், அவர்களை பேட்டி காண அவர்களுடன் கூடாரத்திற்கு சென்றது..

வீட்டில் காசலா அவ்வப்போது மயங்கி விழுவார்.

"அவர் பெலாரூஸிலிருந்து வந்த முதலே இப்படித்தான் இருக்கிறார். ஏனென்றால், அவர் பயந்துவிட்டார். அங்கு என்ன நடந்தது என்று பேசும்போது இப்படி நடக்கும்", என்கிறார் ஹுசைன்.

"நாங்கள் இரண்டு வேலிகளுக்கிடையே மாட்டிக்கொண்டு இறந்துவிடுவோம் என்று பயந்தார். மக்கள் தனியாக அங்கு மாட்டிக்கொண்டு, காடுகளில் இறந்தனர்".

Ghazala lies on the ground while Hussein holds her hand

Ghazala lies on the ground while Hussein holds her hand

காசலாவுக்கு தொடர்ந்து மயக்கம் ஏற்படுகிறது

அவர்களுக்கு நடந்த எல்லாவற்றுக்கும் இடையே, ஐரோப்பாவை அடைய ஹுசைன், காசலா மற்றும் நாமி மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இராக்கில் அவர்கள் ஒன்றாக பல கொடூரங்களை சந்தித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவ தளத்தை அல்-கொய்தா தாக்கியபோது, ஹுசைன் காயமடைந்தார். அவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து, கொடூரமான வாகன வெடிகுண்டு தாக்குதலில், அவர் மீண்டும் காயமடைந்தார். அத்தாக்குதலில் அவரது கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர்.

2014ம் ஆண்டு, ஐ.எஸ் நுழைந்த போது, தனது குடும்பத்தில் 74 பேர் அகப்பட்டுவிட்டனர் என்று ஹுசைன் கூறுகிறார். அவர்களுள் பலர் கொல்லப்பட்டனர். சிஞர் அருகே உள்ள தல் உசார் என்ற அவர்களின் கிராமத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாது. ஏனென்றால், அப்பகுதி அழிக்கப்பட்டு, அங்கு முழுவதும் ஆயுத்தம் ஏந்திய ஐ.எஸ் வீரர்கள் உள்ளனர்.

அவர்கள் கூடாரத்திலிருந்து வெளியேறும் கனவில் உள்ளனர். ஐ.எஸ் குழுவிடம் அடிமையாக இருந்து, உதவும் அமைப்புகளின் உதவியுடன், ஜெர்மனியிலுள்ள தனது இரண்டு உறவினர்களுடன் சேர விரும்புகிறார்.

"நாங்கள் களைப்பை, குளிரை, பசியை, தாகத்தை தாங்கினோம்", என்கிறார் ஹுசைன்.

"நாங்கள் எங்களின் பொருட்களை விற்றோம். ஆனால், இப்போதும் கடவுளுக்கு நன்றி, நாங்கள் உயிருடன் இருக்கிறோம். நாங்கள் மற்றொரு முறை முயற்சி செய்வோம். நாங்கள் பத்திரமாக திரும்பியதற்கு கடவுளுக்கு நன்றி"

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி